சுவிசேஷம் உலகத்திற்காய்
suvisesham ulagathirkaay
சுவிசேஷம் உலகத்திற்காய் சொல்ல வந்தவரே - 2 மானிட செல்வத்தின் பாவக் கறை நீக்க வந்தவரே - 2
குற்றமில்லா இரத்தத்தினால் எங்களை மீட்டவரே - 2 சிந்தினீரே முழு இரத்தமும் எங்களின் பாவத்திற்காய் - 2
பாவங்களை செய்து தினம் பாவிகளாய் வாழ்ந்தோம் - 2 மாசில்லாத இரத்தத்தினால் பாவங்களை மன்னித்தீர் - 2
உலகம் எங்கும் அறியனுமே உம்மைத் துதிக்கணுமே - 2 முழு ஜனமும் உம்மை நோக்கி நன்றி சொல்லணுமே - 2
எங்களுக்காய் ஓரிடத்தை ஆயத்தம் செய்தவரே - 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவோம் - 2