சுவிசேஷம் எனது பங்கு
suvisesham enadhu pangu
சுவிசேஷம் எனது பங்கு என் மேலே விழுந்த கடமை சுவிசேஷம் சொல்லாவிட்டால் ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்
1. ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை விரைந்து நிறைவேற்றுவோம் கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று வேத வசனம் விதைப்போம் -2
பல்லவி
சுவிசேஷம் என் மூச்சு அதுவே என் முதல் கடமை
2. தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல இளைஞர் எழுந்து செல்வோம் உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து வேத வழியில் நடப்போம் -2
பல்லவி
சுவிசேஷம் என் மூச்சு அதுவே என் முதல் கடமை