சுத்த ஆவியே ஜீவ நதியே
sutha aaviyae jeeva nadhiyae
சுத்த ஆவியே ஜீவ நதியே எங்கள் மீதிலே பாய்ந்து வந்திடட்டுமே சுத்திகரியும் சுத்திகரியும் சுத்தவானாய் மாற்றி அலங்கரியும்
1. அசைவாடும் ஆவியே - எம்மை அனல்மூட்டி எழுப்புமையா தேற்றரவாளன் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமையா அனல்மூட்டி எழுப்புமையா - எம்மை தேற்றிட வாருமையா
2 உன்னத ஆவியே - உந்தன் வல்லமையால் நிரப்புமையா பயங்களை நீக்கி சோர்புகள் போக்கி புதுபெலன் தாருமையா வல்லமையால் நிரப்புமையா - என்றும் புதுபெலன் தாருமையா
3. சத்திய ஆவியே - எம்மை போதித்து நடத்துமையா கனிகளினாலும் வரங்களினாலும் நிரம்பிட செய்யுமையா போதித்து நடத்துமையா - எம்மை நிரம்பிடச் செய்யுமையா