சுத்த ஆவியே என்னில் வாரும்
sutha aaviyae ennil vaarum
சுத்த ஆவியே என்னில் வாரும் பரிசுத்த ஓவியம் தாரும் சுயம் என்ணில் சாம்பலாய் மாற என்னை படைக்கிறேன்
பொங்கிவா பொங்கிவா ஜீவநதியே கன்மலையின் தண்ணீரே பொங்கிப் பொங்கி வா
மான்களைப் போல தேடி வந்தேன் ஆத்தும் தாகம் தீர்க்க வந்தேன் கல்வாரி நோக்கி ஓடி வந்தேன் தாகம் தீர்க்கப் பட்டேன்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீ ரே பாவத்தை போக்கும் சுத்த ஆவியே அக்கினிபோல வல்லமையாய் என்னில் இறங்கிடுமே
ஆவியால் உந்தன் வல்லமையை ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன் ஆயத்தமாகி காத்திருப்பேன் அன்பரே வந்திடுவீர்
பற்பல பாஷைகள் பேசிடுவேன் பரலோக இன்பம் ருசித்திடுவேன் தற்பரன் இயேசு மகிமையிலே அற்புதம் கண்டிடுவேன்