சுககாலம் என்கிலும் துக்கமான
sugagaalam engilum thukkamaana
1. சுககாலம் என்கிலும் துக்கமான போதிலும் நெறி நின்று தவறேன் நித்தம் நித்தம் நம்புவேன்.
வாழ்விலும் மா தாழ்விலும் கஷ்ட நஷ்டம் ஆகிலும் யேசுவைப் பின் பற்றுவேன் நித்தம் நித்தம் நம்புவேன்.
2. எந்தன் வெறும் நெஞ்சத்தில் தூய ஆவி விளங்கின அவராலே வெல்லுவேன் நித்தம் நித்தம் நம்புவேன்.
3. இன்பம் ஆகில் பாடவும் துன்பத்தில் மன்றாடவும் மோசம் நேரில் அஞ்சிடேன் நித்தம் நித்தம் நம்புவேன்.
4. ஜீவ காலம் முழுவதும் சாவு பரியந்தமும் நித்ய ஜீவன் நாடுவேன் நித்தம் நித்தம் நம்புவேன்.