சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
sudhandharippen naan sudhandharippen
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன் முறியடிப்பேன் நான் முறியடிப்பேன் எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன்
எரிகோ கோட்டையோ செங்கடளோ எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன் மரணமோ வியாதியோ வியாகுலமோ அவைகளை நான் தகர்த்திடுவேன்
உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்காதே போகும் என்றாரே உன்னை குற்ற படுத்திடும் நாவுகளை இனி மேற்கொள்ளுவாய்
வெண்கள கதவுகள் உடைத்திடுவார் இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் அந்தகார பொக்கிஷத்தை எனக்காக அவர் தந்திடுவார்
உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் இழந்துபோன உன் ஸ்தானத்தையே இன்னறக்கு ஈவாய் தந்திடுவார்