சுபவை நேரம் கிட்டுகிறது யேசுவைக் காண
subavai neram kittugiradhu yesuvaik kaana
1. சுபவை நேரம் கிட்டுகிறது யேசுவைக் காண தம் மக்களை தம்மண்டை சேர்க்கவே சீக்கீரம் வாறார்.
பல்லவி
கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே!
2. பூவெங்கும் சுவிசேஷம் போய்விடும் வெகு சீக்கிரம் மணவாளன் தாமதியாமல் எக்காளம் ஊதவார்.
பல்லவி
கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே!
3. ப்ரகாசத் தூதர்களுடனேயும் வானம் இறங்கி கர்த்தர் தம் பக்தரைச் சேர்த்து மோட்சம் கொண்டு விடுவார்.
பல்லவி
கிழக்கு வெளுப்பதை காண்கின்றோம் யாம் அந்தகாரத்தினூடே! கல்லறையைப் பிளக்கும் காலை ஒளி இதோ காணுதே!
4. இறந்த நம் அன்பர் யாவரையும் அங்கே சந்திப்போம் மனம் உடைந்தோரின் கண்ணிர் யாவும் காணாமலே போம்.