ஸ்தோத்திரிப்போம் இயேசு தேவனையே
sthothirippom yesu devanaiyae
ஸ்தோத்திரிப்போம் இயேசு தேவனையே தூய்மையாய் வாழ்ந்திட வரம் அளித்த
ஸ்தோத்திரிப்போமே தூயர்கள் ஒன்றாய்(க்) கீதங்கள் பாடி அகமகிழ்வோம்
பரிசுத்தர் இயேசுவை துதிப்போமே பாடுகள் சகித்த கர்த்தரையே பாவிகள் எமக்காய் பார்தனில் வந்து பலியாகி மாண்டு உயிர்த்தேனே
பாவங்கள் அனைத்தையும் போக்கினரே சாபங்கள் அனைத்தையும் நீக்கினரே காயங்கள் அடைந்த நாயகன் இயேசு பயங்கள் நீக்கி காத்திடுவார்
பரிசுத்த ஜீவியம் செய்திடவே பரிசுத்த ஆவியை அளித்தனரே தூய்மையாய் வாழ தீமையை ஜெயிக்க நாயகன் அளித்தார் கிருபைதனை
பரிசுத்தர் இயேசுவை துதிப்போமே பாரினில் வந்த நம் மகிபனையே ஆவியினால் நாம் துதித்துப் போற்றி அகமகிழ்வுடனே பணிந்திடுவோம்
காயங்கள் அடைந்த கர்த்தரையே பாடுகள் சகித்த பரிசுத்தரை ஆயத்தமாக ஆச்சரியமுடனே நாயகன் வரவை எதிர்பார்த்து வாழ