ஸ்தோத்திரிப்பேன் இயேசு தேவா
sthothirippen yesu devaa
ஸ்தோத்திரிப்பேன் இயேசு தேவா ஸ்தோத்திரிப்பேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முமுதும் 2 காத்தீரே
1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும்
2. நித்திரையை இன்பமாக்கி பத்திரமாய் இருதயத்தை சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர்
3. பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருந்தும் ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர்
4. சந்திப்பீரே இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய் இப்பகல் முழுதும் ஆவிக்குள் யான் பிழைக்க
5. தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமதுதிரு சித்தமதில்
6. பாவமொன்றும் அணுகிடாமல் பரிசுத்தமாய் பாதை செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன்
7. படைக்கிறேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கைகாலுமாக
8. செய்வேன் யான் எப்போதும் உம்சித்தமே ஆவியுடன் ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் வாக்கை
9. எனைக்காண்போர் உமைக்காண உம்சாயல் எனில் வேண்டும் தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக ஸ்தோ
10. நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்