ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன்
sthothirippen sthothirippen sthothirippen
ஸ்தோத்திரிப்பேன், ஸ்தோத்திரிப்பேன், ஸ்தோத்திரிப்பேன் - நான் - 2 என் தேவனையே நன்றியுடன் ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமையின் தேவா! - 2 மனுஷ ரூபம் எடுத்த உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
மனித அவதாரமான மாசற்ற தேவா! - 2 தாழ்மை கோலம் எடுத்த உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
பாதகர்க்காய் நீதி வழி யோதித் தந்தோரே! - 2 பாரிலும்மையே நினைத்து ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
கெத்செமனே தோட்டமதில் வேண்டுதல் செய்து - 2 ரெத்தவேர்வை சிந்தினோரை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
சிலுவையை சுமந்து கொண்டு நடந்து போனோரே - 2 திருப்பாதம் இரண்டும் முத்தம் செய்து ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
சிலுவையில் தொங்கி மரித்து உயிர்த்தெழுந்தோரே - 2 நித்தம் ஜீவிக்கின்ற உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
ஆரவாரத்தோடுதாமே வானிலிருந்து - 2 திரும்ப வருகின்றவரை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2
என்றைக்கு நான் வந்து காண்பேன் திருசமுகத்தை - 2 நோக்கி நோக்கி வாஞ்சிக்கிறேன் திருசமுகத்தை 2