ஸ்தோத்திரங்களினால் புதுக் கிருபைகள்
sthothirangalinaal pudhuk kirubaigal
ஸ்தோத்திரங்களினால் புதுக் கிருபைகள் பெருக செய்வீர் உமக்கே ஆராதனை ஆபத்து வேளையில் என் ஜெபத்தை கேட்பவரே உமக்கே ஆராதனை-2
ஜெபம் கேட்பவரே பதில் செய்பவரே அற்பமாய் எண்ணாதவரே-2 வேண்டுதல் கேட்டிருவீா்.... தாமதித்திடாமல்-2 சீக்கிரமாய் பதில் செய்திடுவீா்-2
அன்னாளின் ஜெபத்திற்கு பதில் செய்தவரே உமக்கே ஆராதனை ஆகாரின் கண்ணீருக்கு பதில் அளித்தவரே உமக்கே ஆராதனை-2 எளியவனின் சத்தம் கேட்டு இரங்கும் தேவனே-2 என் கதறலுக்கு மனம் இரங்கிடுவீர்-2
என் விண்ணப்ப சத்தம் கேட்டு விரைவாய் வருபவரே உமக்கே ஆராதனை என் விருப்பம் நிறைவேற்றி மகிழச் செய்பவரே உமக்கே ஆராதனை-2 கவலையை களிப்பாக மாற்றுபவா் நீரே-2 நித்திய மகிழ்ச்சி இன்றே தந்திடுவீர்-2
இந்தியாவை இரட்சிக்கும் இரட்சகர் இயேசுவே உமக்கே ஆராதனை ஆதியும் அந்தமுமாய் எப்போதும் இருப்பவரே உமக்கே ஆராதனை-2 உம் நாமம் தரித்தோரின் வேண்டுதல் கேட்டிடுவீர்-2 இரட்சிப்பை இன்றே தந்திடுவீர்-2