ஸ்தோத்திரம் இயேசு
sthothiram yesu
ஸ்தோத்திரம் இயேசு பரா இத்தருணம் ஸ்தோத்திரம் செய்திடுவோம் மாதுரிய கீதமுடன் சாற்றுவோம் உமதன்பை மாதிரத்தில் நீரெம் ஜெயமே
1. கண்களின் மாட்சியாம் அதில கண்டெடுத்தார் எம்மையே கானலோ வேனல் மாநிலமத்தில் ஆனதோர் உம் வழியே - ஸ்தோ
2. ஆருயிர் இயேசு வே ஒளியாய் சேருவீர் காரிருள் நேரிடும் சோதனை துன்பங்கள் நடுவே நேமியே கருணை செய்வீர் - ஸ்தோ
3. காத்திருந்த சித்தர் பலரும் இத்தரை நீங்கினார் சித்தமே யான் செய் யாத்திரை தொடர் அத்தனே அபிஷேகிப்பீர் - ஸ்தோ
4. எம்மையும் மாட்சி கென்றழைத்தீர் செம்மை மிகும் மொழியால் உம் திரு சாயலில் எந்நாளும் வளர இம்மையில் கிருபை செய்வீர் - ஸ்தோ
5. சிந்தையில் இயேசுவின் நிகராய் சந்ததம் வாழ்ந்தவர் சீயோனாய் சேர்ந்திடும் நாளிதோ வருதே சந்தாபம் தீர்ந்திடுதே - ஸ்தோ