ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
sthothiram sthothiramae
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே
2 கோடாக் கோடித் தூதர்கள் சபைகூடி நடனமாடி பாடியும்மைத் துதிக்க அடியானும் உம்மைத் துதிப்பேன்
3. கன்னியர் கீதம் பாடி இயேசு மன்னவனையே போற்றி உன்னி யும்மைத் துதிக்க அடியானும் உம்மைத் துதிப்பேன்
4. பரிசுத்த வான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே பாடி யும்மைத் துதிக்க அடியானும் உம்மைத் துதிப்பேன்
5. மூப்பர்கள் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே ஆர்ப்பரித்துத் துதிக்க அடியானும் உம்மைத் துதிப்பேன்
6. ஆயிரம் நாவிருந்தால் அன்பரைப் பாடியே ஸ்தோத்தரிப்பேன் ஆவியினால் நிறைந்து - எந்தன் அண்ணலிடம் சொல்லுவேன்
7. சின்னஞ் சிறுவர் கூடி, இயேசு மன்னவனையே தேடி உன்னித் துதித்திடவே உம்மை யானும் துதித்திடுவேன்
8. தாழ்த்தித்தலைகுனிந்து, இரத்தசாட்சிகள் போற்றியுமைத்துதிக்க, அடியானும் உமைத்துதிப்பேன் கூட்டமெல்லாம்
9. ஆயிரம் நாவிருந்தால் அன்பரைப் பாடியே ஸ்தோத்தரிப்பேன் ஆவியினால் நிறைந்து - எந்தன் அண்ணலிடம் சொல்லுவேன்