ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
sthothiram sthothiram sthothiram
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த தேவ தேவனே
1.கந்தை பொதிந்தோனே மந்தையர்க் கானந்தனே வந்தோனே புவியில் தன்னையே தந்தோனே மானிடர்க்காய்
3.பொன் முடி வெண்ணங்கி ஜோதியாய் நானணிய முள்முடி சூடியே செவ்வங்கி தரித்த மன்னவனே
4.பாதகன் நான் செய்த பாவங்கள் யாவும் தீர்க்க காதலனே சென்றீர் கஸ்திகளடைய கல்வாரியில்
5.பாவ நிவாரண பலியான ஆட்டுக்குட்டி பாவத்தில் மாளும் மானிடரை மீட்க ஜீவன் தந்தீர்
6.சாத்தானை ஜெயித்திட சக்தியளித்த தேவா புத்தியாய் நடந்து யுத்தத்தில் ஜெயிக்க ஞானந்தாரும்
7.இவ்வித அன்பை நான் எவ்விதம் சொல்லிடுவேன் செவ்வை பாதை சென்று ஜீவவழி நடப்பேன் அவர் பெலத்தால்
8.வானோர்கள் போற்றிடும் ஞானமுள்ள பிதாவே தானங்களை இப்போ தந்திடும் தயவாய் தயாள பிதா