ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
sthothiram sthothiram devaa
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா உந்தன் அன்புக்காய் - ஸ்தோத்திரம்
1. ஏக்சுதன் ஏகராஜனைச் சிநேகமோடே தந்ததால் - ஸ்தோத்திரம்
2. நஷ்டப்பட்டு தூரம் போன என்னை தேடி வந்த மீட்பரே - ஸ்தோத்திரம்
3. பெந்தேகோஸ்தே தினம் பலத்த காற்றாய் வந்தோனே - ஸ்தோத்திரம்
4. லோகத்தில் பாவ பாரமெல்லாம் தேகத்தில் ஏற்ற நாதனே - ஸ்தோத்திரம்
5. சத்துருவின் புத்ரனாகிய என்னை தேவ புத்திரனாக்கியதால் - ஸ்தோத்திரம்
6. எந்தன் நாமம் உந்தன் புஸ்தகத்தில் சேர்த்ததை நினைத்ததால் - ஸ்தோத்திரம்
7. உம்மை பின்பற்ற வேண்டும் என்று சொல்லிப் போன நாதனே - ஸ்தோத்திரம்
8. கர்த்தர் இயேசு கிறிஸ்து மூலம் சத்துருவை ஜெயித்தால் - ஸ்தோத்திரம்
9. ஜீவனுள்ளோர் மத்தியிலென்னை ஜீவனோட வைத்தால் - ஸ்தோத்திரம்
10. எந்தன் ஆவி ஆத்துமா சரீரம் என்றைக்குமே யேற்றோனே - ஸ்தோத்திரம்