ஸ்தோத்திரம் செய்குவேன்
sthothiram seyguven
ஸ்தோத்திரம் செய்குவேன் தேவனுக்கு மகிமையாய் கிருபை பெருகவே - 2
நேத்திரம் போல் காத்தணைத்தார் வாக்குமாறா தேவன் - 2 சாற்றுவேன் துதிகளை ஏழை எந்தன் நாவினால் என்றுமவருக்கே - 2
காத்திருந்து புதியகிருபை பெற்று நாட்கள் தோறும் - 2 போற்றுவேன் புனிதனை பூதலத்தில் என்றுமே புதுமையாக
ஊக்கமான அன்புடனே நேசர் சேவைசெய்வேன் - 2 நீக்குவார் குறைகளை அன்பரே தம்நிறைவினால் ஆசியருளுவார்
காத்திடுவார் கபடற்றோரைக் கைவிடாமல் என்றும் - 2 மாசற்ற அன்பினால் மானிடரை நேசிக்கும் மகிமை தேவனே
நானுனக்கு போதித்து நடக்கும் வழிகாட்டி யோசனை சொல்லுவேன் என்றுரைத்த தேவனோடென்றும் ஜீவிப்பேன்