ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்
sthothiram seluthiduven
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன் துங்கவரே உமக்கு ஸ்தோத்திரம் இன்றும் என்றுமே - 2
நன்னயமாக நாங்கள் இன்றும் ஓர் நாளைக்கண்டோம் - 2 உன்னதரே உம் கிருபை - 2
எத்தனையோ கிருபை நித்தம் நித்தம் புதிதாய் - 2 உத்தமமதாய்க் கடாட்சித்தீர் - 2
பாவத்திற் கேற்றபடி பலனைமேல் சுமத்தாமல் - 2 மேவித்தாய் தந்தை போல் காத்தீர் - 2
இம்மானுவேலரசே இம்மட்டெமைக் காத்தவரே - 2 இனிமேலும் காப்பவர் நீரே - 2
பலவீனர் சுகவீனரை சொஸ்தமதாக்கும் தேவா - 2 பலம் சுகம் ஜீவன் உம்மாலே - 2
இன்றைக்குத் தேவையான யாவையும் தாரும் தேவா - 2 நின்திருச் சித்தப்படியே - 2
அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் - 2 அல்லேலூயா ஸ்தோத்திரமே - 2