ஸ்தோத்திரம் சாற்றிடுவோம்
sthothiram saatriduvom
ஸ்தோத்திரம் சாற்றிடுவோம் புகழ்ந்தேற்றுவோம் - பரனை
1. ஏற்ற இத்தருணம் ஊற்றுவோம் இதயம் தேற்றிடற்கு ஏற்ற நாதனை ஏற்றியே புகழ்வோம் - ஸ்தோ
2. கருணாகரப்பரமா காதலெம்மில் கொண்டோ தாரணியில் தாசனாகத் தாழ்மையானீரோ - ஸ்தோ
3. புறஜாதியானோரைப் புறம்பாக்க எண்ணாதே உறவாடுதற்கு உன்னதத்தில் உரிமையீந்தாரே - ஸ்தோ
4. ஆசீர்வாதங்கள் ஆசையோடெம்மில் கூசிடாமல் ஈசனீந்த நேசமுணர்ந்து - ஸ்தோ
5. பறக்கும் அம்புகள் எமை வதை தொடாமலே உறங்கவிடாது ஊக்கமுடன் உகந்தணைத்தாரே - ஸ்தோ
6. ஆவியின் அருளீந்து தாவி நமைச் சேர்த்து, புாவிகளெமை அன்பிலொன்றாய் ஆகுமருளீந்தார் - ஸ்தோ