ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
sthothiram paadiyae potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனையே வாழ்த்தி வணங்குவேன் நித்தியமாய் இராஜாதி இராஜனையே தாழ விழுந்துந்தன் பாதம் பணிந்து என்றென்றும் வாழ்த்திடுவேன்
1.ஆவியின் வார்த்தையும் நீர் ஆலோசனை கர்த்தனும் நீர் நித்ய பிதா சமாதான பிரபு என்றழைக்கப்பட்டவா நீசனாம் என்னை தேடி வந்தவரை பாசமாய் பாடிடுவேன்
2.முட்கிரீடம் அணிந்தவா ஐங்காயங்கள் அடைந்தவா கல்வாரிதனில் பாடுபட்டீர் நீசன் என்னை இரட்சிக்க எந்தனை மீட்ட கர்த்தருக்கே என்னை முற்றிலும் அர்ப்பணித்தேன்
3.பரிசுத்த தேவனும் நீர் பார்தலத்தில் வந்தவர் நீர் தேடிவந்தீர் ஜீவன் தந்தீர் மீண்டும் வருவேன் என்றீர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா சீக்கிரம் வாருமையா