ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன்
sthothiram paadi potruven
ஸ்தோத்திரம் பாடி போற்றுவேன் ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே - 2 ஆதியும் அந்தமும் இல்லோனே - 2 அரூபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் - 2
அல்லேலூயா - அல்-லேலூயா! பொற்கரனே - ஓமெகாவே! - 2
பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே ஸ்தோத்திரம் பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த - 2 பெத்தலை வாசனே ஸ்தோத்திரம் - 2
மாயமாம் உலகை மறந்து நானும் மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட - 2 மயங்காமல் நீர்தாரணியில் - 2 மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம் - 2
மங்களமே சீயோன் மகிபா - 2 மாறாத பூரண திரியேகா மங்கிடா நித்தியவாசனே - 2 மாறாத அன்புக்காய் ஸ்தோத்திரம் - 2
அமரர் போற்றும் அழகுள்ளோனே அரூபனே சொரூபனே ஸ்தோத்திரம் - 2 அளியும் ஆதி அன்பையே - 2 வழியில் விரைந்து செல்லும் - 2