ஸ்தோத்திரம் கோடா கோடி
sthothiram kodaa kodi
ஸ்தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரமே
1.நன்னயமாக நாங்கள் இன்னும் ஓர் நாளை கண்டோம் உன்னதனே உம் கிருபை
2. எத்தனையோ கிருபை நித்தம் நித்தம் புதிதாய் உத்தமதாய் கடாட்சித்தீர்
3.பாவத்துக்கேற்றபடி பலன் என் மேல் சுமத்தாமல் மேவி தாய் தந்தை போல் காத்தீர்
4. சத்ரு மித்ரங்களாலே சார்ந்த துன்பம் அதிகம் அத்தனையும் நின்று காத்தீரே
5. பெலவீனர் சுகவீனரை பட்சமாய் காருமையா பெலன் சுகம் ஜீவன் உம்மாலே
6.இம்மானுவேலரசே இம்மட்டுமே காத்தவரே இனிமேலும் காப்பவர் நீரே
7. வாழ்க கிறிஸ்துசபை வாழ்க பரிசுத்தாவியும் வாழ்க பிதா குமாரனும்