ஸ்தோத்தரிப்பேன் என் தேவனையே
sthotharippen en devanaiyae
ஸ்தோத்தரிப்பேன் என் தேவனையே துதித்திடுவேன் அவர் நாமத்தையே செய்ததாம் அற்புதங்கள் அதிசயங்கள் சொல்லி முடியாதே நாவும் போதாதே
ஆர்ப்பரிப்பேன் அல்லேலூயா அன்பராம் இன்பராம் இயேசுவுக்கே ( 2 )
எந்தன் ஜீவன் பெலன் அவரே நெருக்கத்தின் நாளில் திடன் அவரே அரணாம் அடைக்கலம் கோட்டையுமாய் ஆபத்தில் அனுகூல துணையவரே
மலைகள் யாவும் விலகினாலும் பர்வதங்கள் நிலைவிட்டு பெயர்ந்தாலும் வல்லவரின் வாக்கு என்றும் மாறிடாதே விலகிடாதே என்றும் அவர் கிருபை
அழைத்தீர் என்னையும் பெயரைச் சொல்லி வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில் தாயினும் மேன்மையாய் நேசித்தீரே தாங்கி நடத்தி ஜெயம் ஈந்தீரே