ஸ்தோத்தரிப்பேன் என்
sthotharippen en
ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவையே ஸ்தோத்திர பலியுடனே ஆர்ப்பரிப்பேன் என் தேவனையே ஆனந்த பலியுடனே
1. கசந்த மாரா மதுரமாகும் கஷ்டங்கள் மாறிவிடும் யேகோவாயீரே என் தேவன் குறைவை நிறைவாக்குவார்
2. பெலவீனங்கள் என்னைத் தாக்கும் போது கிருபை என்னைத் தாங்கும் யேகோவா ராஃபா என் தேவன் என்னை குணமாக்குவார்
3. பந்து சிநேகிதர் தள்ளும்போது தகப்பனாய் அரவணைப்பில் யேகோவா ஷம்மா என் தேவன் நிழலாய் சூழ்ந்து கொள்வர்
4. எதிரியின் மும்முரம் ஓங்கும்போது உம் கரம் என்னை மூடும் யேகோவா நிசி என் தேவன் எனக்கு வெற்றியை தருவார்