ஸ்ரீமா தேவா
sreemaa devaa
ஸ்ரீமா தேவா திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா
1.சுந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ யாவும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே - ஸ்ரீ மா
2. வானம் பூமி வாழ வந்த மானுவேலனே தீனத்துயர் நின்று மீட்ட தேவபாலனே ஞான மணவாளனான நாதன் நீர் வர கானம் பாடிக் காத்திருந்து கனிந்து கும்பிட்டோம் - ஸ்ரீ மா
3 .முந்து கானாவூரின் கலியாணத்தில் வந்தே சிந்தை களிகூரக் குறை தீர்க்க முன்னின்றே சிந்து ரசமாக்கிமகிழ் சேரவும் தந்தாய் அந்த விதம் இங்கு வர அழைத்துக் கும்பிட்டோம் - ஸ்ரீ மா
4. எண்ணும் நன்மை யாவும் தர எங்களோடிரும் இன்னதென்று சொல்லுமுன்பே தந்துக் கொண்டிரும் முன்னம் சென்று தங்குமிடம் காத்துக் கொண்டிரும் இந்த வேலைக் காருமில்லை என்று கூப்பிட்டோம் – ஸ்ரீ மா