சொர்க்கத்தில் உள்ள பிதாவே
sorkkathil ulla pidhaavae
சொர்க்கத்தில் உள்ள பிதாவே உந்தனின் நாமம் பரிசுத்தமே உந்தனின் ராஜ்யம் வரவேண்டும் பூமியில் உம்திரு சித்தம் நிறைவேறவே
அன்றன்று வேண்டிய ஆதாரம்தன்னை இன்றும் எங்களுக்கு தந்திடுமே நாங்கள் பொறுத்து மன்னிப்பது போல் எங்கள் குற்றங்கள் மன்னியுமே - நீர்
எல்லா சோதனை ஜெயித்திடவே தீமையினின்று இரட்சியுமே ராஜ்யம் வல்லமை மகிமை யாவும் என்னென்றும் உமக்கே உரித்தாகும