சொர்க்க ராஜ்யத்தில் என்னை சேர்ப்பாரே
sorkka raajyathil ennai serppaarae
சொர்க்க ராஜ்யத்தில் என்னை சேர்ப்பாரே அன்பின் தேவன் எந்தன் பக்கம் உள்ளாரே முழங்கால்கள் யாவும் முடங்கிடும் நாளில் மாறாமல் சேர்ப்பாரே
மண்ணுள்ள மாந்தர் மாறிடுவார் மாறாத தேவன் அவரே ஆறுதல் தந்து நாள் தோறும் காப்பார் வான்புகழ் இயேசு அவரே
எண்ணில்லா பாவங்கள் மன்னித்தாரே கண்மணிபோல் காத்தாரே தன்னையே தந்த தியாக சொரூபன் விண்ணிலே சேர்ப்பாரே
எனக்காக யாவும் செய்து முடிப்பார் இம்மானுவேல் என் தேவன் வனமான வாழ்வில் பெலமுள்ள கிருபை ஈந்தென்னை காப்பாரே