சூழ்நிலையைப் பார்க்காதே
soozhnilaiyaip paarkkaadhae
சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப் பார்க்காதே உன் அருகில் நிற்கும் இயேசுவை நீ பார் கடல் அலையைப் பார்க்காதே கொந்தளிப்பை நீ பார்க்காதே படகில் உறங்கும் இயேசுவை நீ பார்
அங்கும் இங்கும் பார்க்காதே அங்கலாய்த்துப் போகாதே அப்பா உன் இயேசுவை அனுதினமும் நோக்கிப்பார். - 2
எரிகோவைப் பார்க்காதே எதிரியை நீ பார்க்காதே - 2 துதியில் வசிக்கும் இயேசுவை நீ பார் உன் துயரமெல்லாம் நீங்கிப்போகும் பார் - 2
செங்கடலைப் பார்க்காதே பார்வோனை நீ பார்க்காதே - 2 யுத்தம் செய்யும் இயேசுவை நீ பார் உன் தோல்வியெல்லாம் ஜெயமாகும் பார் - 2
ஆமானைப் பார்க்காதே அகித்தோப்பேலை பார்க்காதே - 2 யோசனையில் பெரியவரைப் பார் அவன் ஆலோசனை அதமாகும் பார் - 2