சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
sondham endru sollikkolla
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக்கொள்ள உம்மை விட ஏதும் இல்ல
இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே
உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன்
உம் ஆவியினால் நான் (பிறந்து) பிழைத்து விட்டேன் உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன்
என் கருவை உம் கண்கள் கண்டது என் அவயங்களில் ஒன்றும் இல்லாதபோது(2) ஒன்றும் இல்லாதபோது (2)