சொல்லி சொல்லி துதிக்கணும்
solli solli thudhikkanum
சொல்லி சொல்லி துதிக்கணும் உங்கள நீங்க தயவாய் நினைக்கணும் எங்கள -2
அப்பா அப்பா உமக்கு ஒப்பானவர் எவருமில்லை -2
அந்தி சந்தி மந்தியானத்தில் உம்மை முந்தி வந்து நான் துதிப்பேன் - 2
என்குறைவெல்லாம் நீர் நிறைவாக்குவீர் என் கண்ணீரெல்லாம் நீர் துடைத்திடுவீர்-2
மாராவின் தண்ணீரெல்லாம் அது மதுரமாய் மாறிப் போகும் - 2
எதிராய் வந்த சூழ்ச்சிகளை தகர்த்திருவார் ஜெயம் தந்திடுவார்-2
துதி செய்யத் தொடங்கியதும் சாத்தான் கோட்டைகள் தகர்ந்துவிழும் -2
உம் பெலன் தந்து என்னைத் தாங்க வேண்டும் உம் மார்பில் சாய்ந்து இளைப்பாற வேண்டும்-2