சோகத்தால் சேர்ந்திடும்
sogathaal serndhidum
சோகத்தால் சேர்ந்திடும் சகோதரி சேருவீர் நேசர் மார்பினிலே ஆசையுடன் இயேசுவில் நேசமுசிப்பாறுதல் நாசலோகில் உனக்குண்டே
1. கல்வாரி சிலுவையில் உன்னை இரட்சிக்க கஸ்தி மிக்கவே பட்டோராய் தொங்குகின்றார் காயத்தில் ஏற்றுமே வரும் பிணிகள் - அவர் காயத்தால் தீர்த்தனரே
2. பாவத்தால் நேர்ந்த உந்தன் மரணம் உறவே தேவ ஆக்கினை அடைந்திட வந்தனரே ஆவதில்லை இந்த இரட்சகரை போல் - மகா பாவனரைக் காணவே
3. வேளையும் காலங்களும் கடந்திடுதே நாளை யுண்டென்று உறுதியாய் உரைக்கலாமோ? சிநேகிதனே தருணமும் இதுவே - இதை சிந்தித்து வந்திடாயோ?
4. ஸ்நானத்தில் அவருடன் இணைந்ததிலே சுயம் மாய்த்திட பெறுவாயே கிருபைதனை வேளையிதே பெற அபிஷேகமே - உன் துள்ளத்தைத் திறந்திடாயோ?
5. வழியும் சத்தியமும் ஜீவனேசுவே அழிவுள்ள தொல்லுலகில் எல்லாம் அவரே ஆழியார் அவர் உன் ஆசிகளெல்லாம் - பெற விழைந்து வந்திடாயோ?