சோதனையில் வீழ்ந்து பாவம் செய்யாதே
sodhanaiyil veezhndhu paavam seyyaadhae
1. சோதனையில் வீழ்ந்து பாவம் செய்யாதே போராட்டத்தில் சற்றும் பின் வாங்கிடாதே துர் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய்.
மீட்பர் உதவி செய்வார் தேற்றியே உன்னைக் காப்பார் தேவ பெலனை ரூடவ்வார் ஜெயம் தந்திடுவார்.
2. வீண் தோழரை நீக்கி வீண் வார்த்தைகளை பேசாமலே தேவ நல் நாமம் நினை ஊக்கமுடன் அன்பும் உண்மையும் விடாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய்.
3. வென்றேகின வீரன் பொற் க்ரீடத்தையும் பேர் வாழ்வையும் பெறுவான் நித்தியமும் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசுவையே நம்பு வென்றேகிப் போவாய்.