சியோனின் பாதையில் சேர்ந்திடும்
siyonin paadhaiyil serndhidum
சியோனின் பாதையில் சேர்ந்திடும் வீரரே செல்லுவீரே அதிவேகமாய்
காரிருள் பூமியை மூடிடுதே கர்த்தரின் வருகை சமீபமாகுதே காத்து நிற்கும் தேவசேயராம் உம்மிலே கர்த்தரே தன் ஒளி வீசுவார்
கொந்தளித்தே ஜனம் மாறிடுதே சந்ததமாய் நிந்தைகள் ஏறிடுதே சொந்தமாய் மீட்பவர் அன்பினால் தந்த மா சந்தோஷமாம் நதி மூழ்கியே
காசினியில் உன்னை தாய் மறப்பாளோ ஆயினும் எந்நாளும் நான் மறந்திடேன் கைத்தலம் தன்னிலும் கண்மணி போலுமே காத்திடுவேன் என்றார் வாக்கதே
ஜோதியாய் உன் நீதி சூரியன் போலும் ஜொலிக்குமே உன் இரட்சிப்பு தீவட்டி போலும் கீதமும் நாதமும் கேட்டிட உன்னிலே ஆதிபரன் இயேசு ஆக்குவார்