சியோன் தேசத்தில்
siyon thesathil
சியோன் தேசத்தில் நான் மகிழ்ந்திருந்து சேனைகளின் கர்த்தரோடு வாழ்ந்திருப்பேன்
1. கவலை இல்லை அங்கு கண்ணீரில்லை வருத்தமும் பசியும் அங்கு அங்கு இல்லை ஆட்டுக்குட்டியானவர் என்னை மேய்த்து ஜீவத்தண்ணீர் ஊற்றண்டை நடத்திடுவார்
2. மரணம் இல்லை அங்கு துக்கம் இல்லை அலறல் சத்தம் அங்கு இல்லை கர்த்தர் இயேசு எந்தன் கண்ணீர் துடைத்து ஜீவ விருட்சம் கனி தந்து நடத்திடுவார்
3. பாவம் இல்லை அங்கு சாபம் இல்லை சூரியன் சந்திரன் அங்கு இல்லை ஆட்டுக்குட்டியானவர் வெளிச்சத்திலே ஆடிப் பாடி என்றும் மகிழ்ந்திருப்பேன்
4. அல்லேலூயா கீதம் பாடி ஆண்டவர் பாத்தில் அமர்ந்திருப்பேன் பொன்னாக மின்னிடும் பரலோகத்தில் பொன் இயேசுவை நிதம் பணிந்திடுவேன்