சியோன் எம் அரணும் சீயோன்
siyon em aranum seeyon
சியோன் எம் அரணும் சீயோன் என் கோட்டையும் சீயோன் எம் ராஜாவின் நகரமே சென்றதில் சேர்ந்திடும் நாட்களும் தூரமோ அன்று பிதாவுடன் நின்றிடுவோம்
லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் அட்சயன் இயேசுவுடன் - இதோ புதியதோர் பாட்டுடன் சீயோன் நகர்தனில் ஜோதியாய் வீற்றிடுவார்
2. இல்லையே வாயில் ஏதுமே வஞ்சனை நல்லதோர் நற்பலனானவரே சொல்லரும் ஸ்தானமாம் சீயோனாம் அம்மலை செல்லவே நித்தமும் நயந்தவர்
3. ஒப்பற்ற பிதாவின் அற்புத பண்புகள் தப்பற தம்மில் கொண்டவரே செப்பமாய் சேவையில் ஜீவனை பானமாய் எப்போது ஊற்றியே மறைந்தவர்
4. கோதுமை மணி போல் வித்திட்ட ஜீவனை மேதினியில் யாவும் வெறுத்தவர் தாதன் திருப்பம் கண்டுகளித்துமே பாதமே சேவிப்பார் நீடூழியாய்
5. சீயோனின் கோபுரம் கொத்தளங்கள் எல்லாம் சென்று நாம் சுற்றியுலாவிடுவோம் சர்வ வல்ல தேவன் பாலனம் செய்திடும் சாற்றுதற்கரிய பொன்புரியே