சிறியோர் பெரியோர் யாவருக்கும்
siriyor periyor yaavarukkum
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி - 2
நம்மை மீட்க இப்பூவில் வந்தார் நம் பாவம் போக்க தன்னை தந்தார் - 2
வானத்திலே தேவ தூதர் தோன்றினார் பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர் நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே ஆமென் ஆமென்...
பிறந்தார் இயேசு இம்மாந்தர்க்காகவே இம்மண்ணில் உதித்தார் நாம் யாவரும் பிரகாசிக்க - 2
1. பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க - 2 அடிமைகளான நம்மை தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள - 2 - பிறந்தார் இயேசு
2. இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே - 2 இம்மானுவேலனாக இருப்பீரே எனக்குள்ளாக - 2 - பிறந்தார் இயேசு