சிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர்
siriyavanai puzhudhilirundhu thookki vidugindreer
சிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர் எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றீர் ஆராய முடிய பெரிய காரியங்கள் செய்பவரே எண்ணிமுடிய அதிசயங்கள் செய்பவரே செய்பவரே
யாக்கோபென்னும் சிறுக்கூட்டமே பயப்படாதே இஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவில் இருக்கிறார் உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே உன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே
யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவை இஸ்ரவேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மை அவை பரவிப் போகும் ஆற்றைப் போலவே நதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான ஒர் குறியுமில்லை கன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனே கழுகைப் போல பெலனும் தந்தேனே