சிறந்து விளங்கும் சீயோன்
sirandhu vilangum seeyon
சிறந்து விளங்கும் சீயோன் சபை சர்வாதிகாரி கிறிஸ்தேசுவின் மணவாட்டி ஆ! ஆ!
இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர், அல்பா ஒமேகா ஆனவர், ஆதி அந்தமான இயேசு.
1. இதோ நான் ஒரு உடன்படிக்கை என் ஜனம் முன் செய்கிறேன்; அதிசயங்களையும் செய்வேன் -ஆ ஆ ஆராய்ந்து முடியாத காரியங்களையும் அற்புதங்களையும் ஆண்டவரே அதை செய்கிறார்; காரியம் பயங்கரமாய் இருக்கும்.
2. ஆனந்த களிப்புடன் பாடிடுவார்கள் மீட்கப்பட்டவர்கள் சீயோனுக்கு வருவார்கள் - ஆ! ஆ! நித்திய மகிழ்ச்சி தலை மேல் இருக்க சந்தோஷம் அடைவார்கள்: சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் தஞ்சம் கிறிஸ்துவில் புகுவோம்.
3. சிறுமைப்பட்டவளே! பெருங்காற்றில் அலசடிப்பட்டவளே! தேர்தல் அற்றவளே-ஆ! ஆ! நீலரத்தினக் கல்லுகளைத் தான் அஸ்திய மெச்சும் படியாய் மதில்களை உச்சித கற்களும் ஆக்குவேன்
4. சாம்பலுக்குப் பதிலாக சிங்காரம் துயரத்திற்கானந்தம், ஆம், தைலமாய்த் தருவேன்-ஆ! ஆ! ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடை கொடுப்பேன்: நாடும் தேவ மகிமைக்காய் நாட்டின் விருட்சங்கள் ஆவார்கள்.
5. தண்ணீர்களைக் கடக்கும்போது உன்னோடு இருப்பேன், எண்ணினவைகளைச் செய்வேன்-ஆ! . ஆறுகளை கடக்கும் போது புரிவதில்லை அக்கினியில் நீ நடக்கும் போது விக்கினம் உன்னைப் பற்றாது.