சிறையின் கஷ்டம் கசப்பிலும்
siraiyin kashtam kasappilum
1. சிறையின் கஷ்டம் கசப்பிலும் நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்! முழு ஸ்வாதீனம் அடையவும் யேசுவே! வந்தனன்! பிணியினின்று சுகத்துக்காய் வறுமை நீங்கச் செல்வத்துக்காய் பாவத்தை விட்டு ஆத்திரமாய் யேசுவே வந்தனன்.
2. இழிவு நஷ்டம் தவறிலும் நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்! ரட்சிப்பின் லாபம் அடையவும் யேசுவே! வந்தனன். துன்பத்தை விட்டு இன்பத்துக்காய் தொல்லையைவிட்டுச் சாந்தத்துக்காய் இகழ்ச்சி நின்று மகிழ்ச்சியாய் யேசுவே வந்தனன்.
3. மருளுகின்ற ஸ்திதியிலும் நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்! தேவனின் சித்தம் அறியவும் யேசுவே! வந்தனன். ஆபத்தினின்று சம்பத்தையும் தாழ்வினைவிட்டு வாழ்வினையும் கண்டடைவேன் இந்நேரத்திலும் யேசுவே! வந்தனன்.
4. மரணக்கொடி பயத்திலும் நின்று வந்தேன்! நீங்கி வந்தேன்! நேசரின் வீட்டில் மகிழவும் யேசுவே! வந்தனன். நாசத்தை விட்டு ஜீவனுக்காய் மோசத்தினின்று பாக்யத்துக்காய் திருச் சமூகத் தின்பத்துக்காய் யேசுவே! வந்தனன்.