சின்ன ஒளிக்கதிர் யார்
sinna olikkadhir yaar
1. சின்ன ஒளிக்கதிர் யார் உனக்கொளி கொடுத்தார்? எங்கள் பிதா தங்க நிறக் குருவி எங்கு பாடக் கற்றாய் நீ? - பிதாவிடம்.
எங்கள் பிதா தேவனே எல்லாம் தந்தார் அன்பரே அன்பரே! அன்பரே! அன்பரே!
2. சின்ன இன்ப பூவே யார் உனக்கழகு தந்தார்? - எங்கள் பிதா மலை நாட்டு ஓடையை ஓடவும் செய்தார் சொல்லால் எங்கள் பிதா.
3. இன்ப முகப் பாலகா! இன்பம் உனக்கேதையா? - பிதா தந்தார் பட்சி போலக் களிப்பாய் எங்கு பாடப் படித்தாய்? - பிதாவிடம்.