சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singaasanathil veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே
என் ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் கீழே அமர்ந்திருந்து என்றும் ஆராதிப்பேன்-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும்
ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும் சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர் எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும்