சிந்திக்கவும் இயலா
sindhikkavum iyalaa
1. சிந்திக்கவும் இயலா வேதனை கொண்டவராய் பாரச் சிலுவையினை சுமந்தே செல்லுகிறார் முட்கிரீடம் சூடினோராய் சிலுவையில் அறையுண்டு ராய் உன் பாவ பாரந்தனை சுமந்தே தொங்குகிறார்
வா .... என் மகனே இந்த சிலுவையின் தொனி கேள் உன்னை சொந்தமாய் மாறிடவே
2. உம் திரு மேனியெல்லாம் கிழிந்தே தொங்கிடுதே உம் தேக எலும்புகளை எண்ணிட கண்டிடுதே நீரென்று கண்டிடவோ ஏலாத இந்நிலையோ ஏன் இந்த கோமகனின் கொடூர காட்சியிதோ -- வா.
3. கொடிய கோலத்தால் அடிகள் சிரசின் மேல் கொடிய முள்ளுகள் மூர்க்கமாய் குத்திடுதே வடிய உதிரமும் தாகமானேன் என்றீரே முடிந்ததென்றுரைத்தே தலையும் சாய்த்தீரன்றோ
4. தீராத நோய்களின் வேதனை கொண்டு நீயும் ஆறாத பாவங்களால் நொந்திப்போ வாடுவதேன் தூயவர் தழும்புகளால் உன் வியாதி தீர்த்திடவே ஆயனாய் கரங்கள் நீட்டி இப்போதே அழைக்கிறார் - வா
5. முட்கிரீடம் தரித்தோனை பொற்கிரீடம் தரித்தோனாய் மகிமையில் கண்டிடும் நாள் விரைவாய் நெருங்கிடுதே நீசனும் என்னையுமே தம்முடன் சேர்த்துவிடுவார் ஆசை என் நேசரின் நீடூழியாய் வாழ்வேனே வா