சிலுவையின் பாதத்தில் விஸ்வாசித்து
siluvaiyin paadhathil visvaasithu
1. சிலுவையின் பாதத்தில் விஸ்வாசித்து நிற்பேன் அலைந்து சோரும் பூமியில் தங்கும் பாறை நிழல் பாழ்வனாந்தர வழியில் தாபரிக்கும் வீடு கொடும் சூர்யவெப்பம் கவலைகளில் என் ஆறுதல்.
2. கோர வன் சிலுவையில் எனக்காய் ஒருவர் வேதனையால் சாகின்றதை என் கண்கள் காணுதே. பாதிக்கப்பட்ட என் நெஞ்சில் இரு அதிசயம் மீட்பின் அன்பும் என் அபாத்ரமும் தேவ ரகசியம்.
3. சிலுவை நிழலே நீ என் புகலிடமே உம்முகம் சூர்யன் ஒளி போல் வேறே ஒளி காணேன் உலக இன்பம் நீக்கினாய் இழப்பே அறியேன் சிலுவை அன்றி வேறொன்றிலும் மேன்மை நான் பாராட்டேன்.