சிலுவையின் அண்டையில்
siluvaiyin andaiyil
சிலுவையின் அண்டையில் இதோ வாரேன் தாழ்மையாய் இவ்வுலகின் இன்பத்தை வெறுத்தே பூரணமாவேன்
நம்புகிறேன் கர்த்தாவே கல்வாரியின் நேசரே படைக்கிறேன் சிலுவை முன் முற்றிலுமே இரட்சிப்பீர்
நீரே எந்தன் வாஞ்சையே நீண்ட நாள் பாவங்களை நீக்கிச் சுத்திகரிப்பேன் நம் இயேசு மொழிந்தனர்
என்னை முற்றும் ஈகிறேன் எந்தனுக்குள்ள தெல்லாம் ஆத்துமா சரீரமும் உமக்கே சொந்தமாக
உந்தன் வாக்கை நம்பினேன் நின் இரத்தம் தெளித்தீர் உந்தன் பாதம் விழுந்தேன் உம்முடனே மரித்தேன்
இயேசு என்னை நிறைப்பார் பூரணமாய் அவரில் குறையொன்றும் அற்றுமே மகிமை மகிமையே