சிலுவையிலே என் பாவம்
siluvaiyilae en paavam
சிலுவையிலே என் பாவம் யாவும் சுமந்து தீர்த்தவரே சிறகொடிந்த என்னையும் சிறகினடியில் காத்தவரே (2)
1. பாவியாய் நானும் வாழ்ந்தலைந்தேன் பாவியென்று நான் தள்ளப்பட்டேன் பாரத்துடன் என்னைத் தேடி பாசமாய் அணைத்துக் கொண்டார்
2. விபத்தில் நானும் வீழ்ந்தேன் வீரனாய் வந்தென்னைக் காத்தீர் தூக்கி எடுத்து காயம் கட்டி தூயவனாக்கி விட்டீர்
3. காத்திருந்து நானும் ஜெபித்திட கரங்கள் தட்டி துதித்திட கர்த்தாவே நிரப்பி என்னை கருத்துடன் நானும் போதிக்க
4. தாகத்தினால் நான் தவித்தேன் தாகமுள்ளவரே வாரும் என்றீர் தாரணியின் தாகம் தீர்க்க தாகமாய் சிலுவையில் தொங்கினீரே