சிலுவை சுமந்து முள்முடி சூடி
siluvai sumandhu mulmudi soodi
சிலுவை சுமந்து முள்முடி சூடி சிறந்தவர் செல்கின்றார் மாமலை மேல்
1. மரணத்தின் நிமித்தம் அன்று அவர் ஆத்மா மா வேதனையால் தவித்திட்ட இரவில் (2) சீஷர்கள் தூங்கினாரே - அன்பர் சிந்தையில் நானிருப்பேன் - அன்பு (2)
2. இந்தப் பாத்திரம் உம் சித்தமானால் என்னை விட்டு நீங்கிடச் செய்யும் (2) என் சித்தம் வேண்டாம் என்றார் - இயேசு உம் சித்தம் போதும் என்றார் (2)
3. அறிந்தார்களானால் அறைந்திருப்பாரே மகிமையின் கர்த்தரை மரத்தின் மேல் அன்று (2) அறியாமல் அறைந்திட்டனர் - இன்று அறிந்துமே அறைகின்றாரே - யூதர் (2)
4. தேவ கோபத்தின் பாத்திரமாம் என்னை தமது கிருபா பாத்திரமாக்க (2) நீர் பட்ட பாடுகள் தான் - எந்தன் சிந்தையில் தரித்திடுவேன் - நாதா (2)
5. இரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுக்க மரணத்தின் பாத்திரம் என் இயேசு எடுத்தார் (2) பாத்திரம் நிரம்பிடுதே - ஜீவ நாளெல்லாம் துதித்திடுவேன் - எந்தன் (2)