சிலுவை சுமந்ததெல்லாம்
siluvai sumandhadhellaam
சிலுவை சுமந்ததெல்லாம் மறந்து நீ போனாயோ பாடுகள் ஏற்றதெல்லாம் நினைவினில் இல்லையோ வாரினால் அடித்தார்கள் உனக்காய் ஏற்றுக் கொண்டேன் காரி உமிழ்ந்தார்கள் உனக்காய் சகித்துக் கொண்டேன் விலகிடாதே என்னை வெறுத்திடாதே என் மகனே என் மகளே ஏன் விலகி... போகின்றாய்
என் மகனே என் மகளே ஏன் விலகி போகிறாய் என் மகனே என் மகளே ஏன் என்னை வெறுக்கிறாய்
என் அன்பை காட்டிலும் உலக அன்பு முக்கியமா என் பாசம் பார்க்கிலும் பணம்தான் அவசியமா உனக்காக (நான்) மரித்தேனே எதற்காக (என்னை) மறந்தாயோ என் மகனே... என் மகளே...
என்னோடு பேசிடவே உனக்கு விருப்பமில்லையா என்னுடைய பாசமது உனக்கு புரியவில்லையா உனக்காக (நான்) அடிக்கப்பட்டேன் எதற்காக (என்னை) மறந்துவிட்டாய் என் மகனே... என் மகளே...
திரும்பி வா என் மகனே உனக்காக தவிக்கிறேன் என்னிடத்தில் வருபவனை புறம்பே நான் தள்ளேனே உனக்காக (நான்) இருக்கின்றேன் எதற்காக (நீ) கலங்குகிறாய்
என் மகனே... என் மகளே... திரும்பி நீ வந்துவிடு என் மகனே... என் மகளே... திரும்பி நீ வந்துவிடு
என் மகனே என் மகளே நீ திரும்பி வந்துவிடு என் மகனே என் மகளே என் அன்பை நினைத்திடு