சிலுவை சுமக்கின்றேன் நான்
siluvai sumakkindren naan
சிலுவை சுமக்கின்றேன் நான் சிலுவை சுமக்கின்றேன் அன்று காந்தோன் முடியவில்லை இன்றும் தொடர்ந்தேன் முடிவும் இல்லை
பாதையோரம் படுக்கை தேடும் பாமரன் திசையில் தம் பாடுபட்டு பசியால் வாடும் ஏழையின் குடிலில் வேலை தேடி ஏங்கி நிற்கும் மெனுவில் கட்ட தினம் காலை மாலை கண்ணீர் சிந்தும் முதுமையின் தவிப்பில் வறுமை கோட்டின் பெருமை காக்கும் சிலுவையின் வடிவில் இங்கு வரதட்சணையின் கொடுமை தாங்கா அழிந்திடும் இழிவில்
சாதி வெறியும் சமய பிரிவும் நடந்திடும் போரில் ஒரு நீதி கேட்டு குமுறும் நெஞ்சம் எழுப்பிடும் குரலில் ஒடுக்கப்பட்டு விளிம்பில் வாழும் எளியவர் உருவில் இங்கு விரட்டப்பட்டு அலைந்து திரியும் அகதிகள் நடுவில் உலக மயத்தின் பிடியில் தவிக்கும் ஏழை நாடுகளில் அங்கு நலிந்து சரிந்து மறைந்து போகும் மொழிகளின் வடிவில்