சிலுவை நிழலே
siluvai nizhalae
1. சிலுவை நிழலே எனக்கென்றும் ஆனந்தம் என் துன்பத்தில் மா மேருவின் நிழல் நான் காண்கிறேன் தனிமையில் மறைவிடம், வழியிலோர் நிழல் கஷ்டங்கள் உறுத்தும்போதென் சங்கேதம் அதுவே
2. என் இயேசுவின் சிலுவை நான் நோக்கிப் பார்க்கையில் எனக்காய் உயிர்விட்டதோர் உருவைக் காண்கிறேன் இழிஞன் எனை மீட்டிட அவர் விலையானார் அதுவே மகா அதிசயம் என்றுணர்ந்தேன் உள்ளத்தில்
3. சிலுவை நிழலே என் தஞ்சம் இப்பாரினில் என் மீட்பர் முகம் மாத்திரம் போதும் இப்பாவிக்கு பூலோக நன்மைகள் ஒன்றும் வேண்டாம் என் தேவனே என் செய்கை யாவும் வெட்கமே, என் மேன்மை சிலுவையே.