சிலுவை மரத்தில்
siluvai marathil
சிலுவை மரத்தில் ஏற்றினரோ மாசற்ற என் இயேசுவை பாவி எந்தன் பாவத்திற்காகவும் பாரம் மிகும் கல்வாரியில்
தேகம் சிதைந்திடவே முள் முடி சூட்டினரோ மாந்தர் தம் பாவத்தை போக்கிட மண்ணகம் தோன்றிய மாமணியே
அவமானச் சின்னம் அதை ஆண்டவா சுமந்ததீரோ அகிலத்தின் வேதனை கேட்டிட நீரும் தொங்கினீர் சிலுவையிலே
உந்தன் பாவத்தினால் அவர் தேகம் சிதைந்ததே உந்தனின் பாவங்கள் சாபங்கள் நீங்கிட தம் இரத்தம் சிந்தினாரே