சேவிப்பேன் நான் உம்மை
sevippen naan ummai
சேவிப்பேன் நான் உம்மை - 2 என் ஜீவன் பிரியும் வரை என் ஆயுள் முடியும் வரை - அல்லேலூயா உம்மை சேவிப்பேன் - 4
1. எத்தனையோ முறை ஏமாற்றினேன் உம்மை என்னை தள்ளி விடாமலே மீண்டும் சேர்த்துக் கொண்டீரே - அல்லேலூயா
2. நித்தம் பலமுறை பரிசுத்தம் தவறினேன் உம் கிருபை இரக்கங்களால் மன்னித்து ஏற்றுக் கொண்டீரே - அல்லேலூயா